இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம்,பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று சமாதானத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மரியா ரெஸ்ஸா (அமெரிக்க பத்திரிகையாளர்), டிமிட்ரி முராடோவ் (ரஷ்ய பத்திரிகையாளர்) ஆகியோருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி, ஜனநாயகத்திற்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
Reported by : Sisil.L