ஒன்ராறியோவில் அடுக்குமாடி குடியிருப்பில்  தவறி விழுந்து பலியான குழந்தை!

ஒன்ராறியோவின் லண்டனில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் பல்கனியிலிருந்து குழந்தை ஒன்று தவறி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


லண்டனின் லைல் தெரு மற்றும் கிங் தெரு பகுதியில் இருந்து 911 இலக்கத்தை தொடர்பு கொண்டு குழந்தை தவறி விழுந்தது தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.


இதனையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த அவசர மருத்துவ உதவிக் குழுவினர், ஆபத்தான நிலையில் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒக்டோபர் 2ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தில் குழந்தை அதே நாளில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது.


இந்த நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தை மீட்கப்பட்ட பகுதியில் திங்களன்று பூக்கள், பொம்மைகள் என வைத்து அப்பகுதி மக்கள் நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.


 குழந்தை மரணமடைந்த துயரத்திலிருந்து அதன் பெற்றோர் மீளவில்லை என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் குழந்தையின் பாலினம் அல்லது வயது உட்பட எந்தத் தகவலையும் லண்டன் பொலிஸார் வெளியிட மறுத்துள்ளனர். ஆனால் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள், 19 அல்லது 20 ஆவது மாடியின் பல்கனியிலிருந்து குழந்தை தவறி விழுந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். 

 


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *