அரசாங்கம் எந்த வேளையிலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மக்கள் ஆணையை மீண்டும் புதுப்பிப்பதற்காக மீண்டும் மக்கள் முன் செல்வதற்குத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்களை தாமதிப்பதற்கு எதிராக நாங்கள் முன்னைய அரசாங்கத்துடன் மோதலில் ஈடுபட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களே அரசாங்கங்களை தெரிவு செய்வதால் அவர்களுக்கு மீண்டும் அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்பது குறித்து நாங்கள் உறுதியாக உள்ளோம் எனத் தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ எனினும் தேர்தலை நடத்துவது குறித்து தற்போது ஆராயவில்லை, மக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு முயல்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
—————
Reported by : Sisil.L