அவுஸ்திரேலியப் பிரஜைகள் வெளிநாட்டுக்கு பயணிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த 18 மாத தடை நவம்பர் மாதம் நீக்கப்படும் என அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியப் பிரஜைகள் மற்றும் நிரந்தர வதிவிடப் பிரஜைகளுக்கான இந்தத் தடை நீக்கத்துடன் அவுஸ்திரேலியாவின் எட்டு மாநிலங்களில் உள்நாட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பது தொடர்புபடுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக அவுஸ்திரேலியப் பிரஜைகளும் நிரந்தர வதிவிடப் பிரஜைகளும் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ள பிரதமர் பின்னர் வெளிநாட்டுப் பயணிகள் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியர்களின் உயிர்களைக் காப்பற்றியுள்ளோம். தற்போது அவர்களுக்கான வாழ்க்கையை திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாஙகள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றினோம். எங்கள் மக்கள் முன்னர் இந்த நாட்டில் அனுபவித்த வாழ்க்கையை மீண்டும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
————-
Reported by : Sisil.L