மீண்டும் சேவைக்குத் தயாராகும் ரயில்கள்

ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் சுமார் 50 அலுவலக ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே உப பிரிவின் தலைமைப் பொறியியலாளர் கே.ஜி.எஸ்.பண்டார தெரிவித்தார்.


தனிமைப்படுத்தல் ஊரடங்குக் காலத்தில்  சேவையில் ஈடுபடாதிருந்த ரயில்களின் தொழில்நுட்பக் கோளாறுகள், மின் கோளாறுகள், புதிய ஆசனங்களை நிறுவுதல், தீந்தை பூசுதல் மற்றும் கிருமித் தொற்று நீக்கம் என்பவற்றை மேற்கொள்ள முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

 
தற்போது 91 ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

 
அதன்படி, பிரதான பாதையில் 33 சேவைகளும், சிலாபம் வழித்தடத்தில் 14 சேவைகளும், வடக்குப் பாதையில் இரண்டு சேவைகளும், களனிவெளி வழித்தடத்தில் 08 சேவைகளும் மற்றும் கடலோரப் பாதையில் 34 சேவைகளும் மேற்கொள்ளத்  தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *