இலங்கையில் தினமும் 5000 மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகிறது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உலகின் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணடிக்கப்படுகிறது என உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றுப்படி தெரியவந்துள்ளது என்றும் உணவுக் கழிவுகள் மற்றும் உணவு மாசு குறைப்பு குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினத்தையொட்டி சுற்றுச்சூழல் அமைச்சில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்தத் தொகை ஆண்டுக்கு 1.3 பில்லியன் தொன். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பயிர்களில் நூற்றுக்கு சுமார் 40 சதவீதம் வீணடிக்கப்படுகின்றது என்றும் சுமார் 5,000 மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட, சமைக்கப்படாத உணவு ஒவ்வொரு நாளும் குப்பையாக வீசப்படுகிறது என்றும் இந்த நிலை நாட்டுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
———-
Reported by : Sisil.L