இலங்கையில் மேலும் 51 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று முன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து; 731 ஆக அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் உயிரிழந்தவர்களில் 29 ஆண்களும், 22 பெண்களும் அடங்குகின்றனர்.
இதில் 5 ஆண்கள், 5 பெண்கள் என 10 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 41 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 24 ஆண்களும், 17 பெண்களும் அடங்குகின்றனர்.
————–
Reported by : Sisil.L