அமெரிக்கத் தூதுவரைக் கவர்ந்த ‘மெனிகே மகே ஹிதே’ பாடல்

இ ல ங் கைக்கான  அ மெ ரி க் க த் தூதுவர் எலைய்னா பி டெப்லிட்ஸ், இலங்கைப் பாடலான மெனிகே மகே ஹிதேவின் வயலின் பதிப்பைக் கேட்டு மகிழ்ந்தேன் எனக் கூறியுள்ளார்.


கலிபோர்னியாவின் தெருக்களில் கரோலினா ப்ரோட்சென்கோ என்பவர் வாசித்த வயலின்பதிப்பு, இசை என்பது உலகளாவிய மொழி என்பதற்கு ஒரு சான்று என்று தூதுவர் டுவீட் செய்துள்ளார்.


உக்ரேனிய நாட்டைச் சேர்ந்த புரோட்சென்கோ தனது யூடியூப் அலைவரிசையில் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளார், அதில் “மெனிகே மகே ஹிதே’ என்ற பாடலுக்கு தாம் வயலின் வாசிப்பதை அவர் பதிவிட்டுள்ளார்.


யோஹானி மற்றும் சதீனின் மெனிகே மகே ஹிதேயின் வயலின் அட்டைப் பாடல் என்று அவர் ஒரு செய்தியை அதில் வெளியிட்டுள்ளார்.
யோஹானி மற்றும் சதீனின் மெனிகே மகே ஹிதே தற்போது உலகத் தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ளது.


இந்த வாரம் யூடியூப் உலக தரவரிசையில் இலங்கைப் பாடல் 7 ஆவது இடத்தில் உள்ளது.


 “மெனிகே மகே ஹிதே’ பாடல் யூடியூபில் 11.9 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.
நடிகர் அமிதாப் பச்சன் இந்தப் பாடலின் ஹிந்தி பதிப்பிற்கு நடனமாடும் காணொலியைப் பகிர்ந்து இந்தியாவின் கவனத்தை ஈர்த்த பிறகு
இந்தப் பாடல் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
——————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *