யாழ்.மாவட்டத்தில் உயிரிழந்த மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த சுப்பிரமணியம் ஜெகதீஸ்வரன் (வயது-70), அரியமலர் குணரட்ணம் (வயது 66)ஆகியோருக்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த ஏ.இராசதேவி (வயது 58) என்பவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
—————
Reported by : Sisil.L