கனடாவில் முதல் முறையாக பாலியல் தொழில் மற்றும் பாலியல் தொழிலாளர்களை ஆதரிக்கும் அமைப்பு நாட்டின் தொழிலாளர் சங்கத்தில் இணைக்கப்பட்டது.
கனடாவில் 1986ஆம் ஆண்டு முதல், பாலியல் தொழில் மற்றும் பாலியல் தொழிலாளர்களை ஆதரிக்கும் அமைப்பாக மேகிஸ் (Maggie’s) இயங்கி வருகிறது.
தலைநகர் டொரன்ரோவை தளமாகக் கொண்ட இந்தப் பழைமையான பாலியல் தொழிலாளர் அமைப்பானது, தற்போது கனேடிய பொது ஊழியர் சங்கத்தின் (CUPE) கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாட்டில் ஒன்றிணைக்கப்பட்ட முதல் பாலியல் தொழிலாளர் அமைப்பாக மேகிஸ் மாறியுள்ளது.
தொழிற்சங்கம் மேகியின் ஊழியர்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தினாலும், கனடா முழுவதும் உள்ள பாலியல் தொழிலாளர்கள் இந்த நடவடிக்கை நாடு தழுவிய போக்கைத் தூண்டும் என்று நம்புகிறார்கள்.
மற்ற தொழிலாளர்களைப் போலவே, பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களது உரிமைகளை தக்கவைத்துக் கொள்ள இந்தத் தொழிற்சங்கம் பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
———————
Reported by : Sisil.L