கொரோனா அபாயக் கொடுப்பனவு உட்பட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய சுகாதார தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நண்பகல் நாட்டின் பிரதான வைத்தியசாலைகளின் முன் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அந்த வகையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை முன் சுகாதார பணியாளர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.