சகாராவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி மாலி, நைஜர் மற்றும் புர்கினோ பாசோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் மூளையாகச் செயற்பட்டுள்ளார். பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
அவரை பற்றிய தகவல் தருவோருக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.
இந்நிலையில், பிரான்ஸ் அதிரடிப் படையினர் சகாராவில் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஷராவி கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இது மிகப்பெரிய வெற்றி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
————-
Reported by : Sisil.L