இங்கிலாந்து நாட்டில் 12 முதல் 15 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரிகள் செய்த பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை அந்த நாட்டின் அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து இங்கிலாந்து நாட்டின் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் கூறுகையில், “12 முதல் 15 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்துவதற்கான தலைமை மருத்துவ அதிகாரிகளின் பரிந்துரையை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். கொரோனா பரவுவதில் இருந்து மாணவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். பள்ளிகளில் கொரோனா பரவல் குறையும், இதனால் வகுப்பறையில் மாணவர்கள் இருப்பார்கள்” எனக் குறிப்பிட்டார்.
இதன்படி மாணவர்களுக்கு பைசர்/பயோ என்டெக் தடுப்பூசி போடப்படும்.
ஆனால் இப்படி தடுப்பூசி போடுவதற்கு மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலர்கள் அல்லது பராமரிப்பாளர்களின் சம்மதத்தை தடுப்பூசி செலுத்தும் ஊழியர்கள் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reported by : Sisil.L