நோர்வேயில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழரான ஹம்ஸி குணரட்ணம் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மூன்று வயதில் தனது பெற்றோருடன் நோர்வேக்கு அகதியாக வந்த ஹம்ஸி (ஹம்சாயினி), தமிழ் இளையோர் அமைப்பில் இணைந்து அரசியலுக்கு வந்தவர். தொழிற்கட்சியின் ஒஸ்லோ இளைஞரணியில் இணைந்த அவர் அதன் தலைவியாகவும் பதவி வகித்தவர். 19 வயதில் (2007) ஒஸ்லோ மாநகரசபையின் பிரதிநிதியாகப் பெரும் ஆதரவுடன் தெரிவான அவர், 2015 முதல் ஒஸ்லோ மாநகர சபையின் துணை முதல்வராகப் பதவி வகிக்கிறார்.
நோர்வேயின் மிகப்பெரிய கட்சியான தொழிற்கட்சி, தலைநகர் ஒஸ்லோவில் நிறுத்திய வேட்பாளர்களில், பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யூனாஸ் கார் ஸ்டூரவுக்கு அடுத்த இடத்தில் ஹம்சியை நிறுத்தியதன் மூலம் அவரின் பாராளுமன் றப் பதவியை உறுதி செய்திருந்தது. முழு நேர அரசியல்வாதியாக நோர்வேத் தமிழரிடையே இருந்து உருவாகியவர் ஹம்ஸி மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது.
—————
Reported by : Sisil.L