நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 135 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்த வர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் மரணமடைந்த 135 பேரில் 71 ஆண்களும், 64 பெண்களும் அடங்குகின்றனர். இதில் 12 ஆண்கள், 14 பெண்கள் என 26 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 109 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 59 ஆண்களும், 50 பெண்களும் அடங்குகின்றனர்.
———————-
Reported by : Sisil.L