தடுப்பூசிக் கொண்டாட்டத்தின் மயக்கத்திலுள்ள மக்கள் பொதுச்சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற தவறுகின்றனர் என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் நோயாளிகளை பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. எங்கள் பணியாளர்களால் நிலைமையைக் கண்காணிக்க முடியாத நிலைக்கு நாங்கள் வந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L