ஒன்ராறியோவில் ஞாயிறன்று 784 கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவு

ஒன்ராறியோவில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 784 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்தத் தொற்றாளர்களில் முழுமையாக தடுப்பூசி பெறாத அல்லது தடுப்பூசியின் நிலை தெரியாத நபர்கள் 602 பேர் உள்ளனர்.சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட  நாளாந்த மாகாண  கொவிட் குறித்த புள்ளி விபரங்கள் வருமாறு:

சோதனைகள் நிறைவு : 23,625 மாகாண அளவிலான சோதனை நேர்மறை வீதம் : 3.2 சதவீதம்

சிகிச்சையில் உள்ள தொற்றாளர்கள் : 6,249 கொவிட்- 19 தொடர்பான நோய்களால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளோர் : 184 – சுவாசிக்க வெண்டிலேட்டர் தேவைப்படுவோர் : 107

மரணங்கள் : 6 இதன்படி  அதிகாரபூர்வ இறப்பு எண்ணிக்கை : 9,611 தடுப்பூசிகள் : ஞாயிறு வரை 21,167,527. அதாவது 12 வயதுக்கு மேற்பட்ட ஒன்டேரியர்களில் 84.3 சதவீதமானோர் தடுப்பூசியின் ஒரு டோஸைப் பெற்றுள்ள அதேவேளை 78 சதவீதமானோர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.
—————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *