இராஜாங்க அமைச் சர் அஜித் நிவாட் கப்ரால் எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ளாரென அரச உயர் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்று அஜித் நிவாட் கப்ராலுக்காகத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்பதாயின் கப்ரால் சில நிபந்தனை களை விதித்திருந்தார். அதன்படி மத்திய வங்கியின் ஆளுநராக தாம் பொறுப்பேற்றால் அமைச்சருக்கு இருக்கின்ற அதிகாரங்கள், சிறப்புரிமை களையும் அவர் கேட்டிருந்தார். இவற்றை வழங்குவதற்காகவே தற்போது விசேட வர்த்தமானி அறிவிப்பு தயாரிக்கப்படுவதாக அறிய முடிகிறது.
Reported by : Sisil.L