கனடாவில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்துக் கணிப்பில் பின்தங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் செப்டம்பர் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், திங்களன்று தனது முக்கிய போட்டியாளரை ட்ரூடோ கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தலை முன்னிட்டு பிரதமர் ட்ரூடோ உட்பட முக்கிய தலைவர்கள் சூறாவளி பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கனடாவில் துப்பாக்கி பயன்பாட்டுக்கு சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவோம் என கன்சர்வேட்டிவ் கட்சியின் Erin O’Toole கனேடிய மக்களுக்கு உறுதி அளித்துள்ளார். அதை கடுமையாக விமர்சித்துள்ள பிரதமர் ட்ரூடோ, மக்களைக் குழப்ப அவர்கள் எது வேண்டுமானாலும் கூறி உறுதியளிக்கலாம் எனக் கூறியுள்ளார்.
இதனிடையே, ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் கன்சர்வேட்டிவ் கட்சியினர் 34.9% வெற்றி வாய்ப்புடனும் லிபரல் கட்சியினர் 33.4% வெற்றி வாய்ப்புடனும் புதிய ஜனநாயகக் கட்சி 18.9% வெற்றி வாய்ப்புடனும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
—————-
Reported by : Sisil.L