கொழும்பு நகருக்குள் கொரோனா வைரஸ் நோயாளிகள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் 20 முதல் 29 வயதிற்கு உட்பட்ட 97,300 பேர் உள்ளனர். 65,000 பேர் கொழும்பு நகரத்திற்குள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நகரில் மிக்சிறந்த தடுப்பூசி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தமை காரணமாகவே நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L