நவம்பர் 1ஆம் திகதி முதல் கொழும்பு -பரிஸ் விமான சேவையை வாரத்தின் 3 நாட்களுக்கு இயக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
269 பொருளாதார இருக்கைகள் கொண்டதும் 28 வர்த்தக வகுப்புக்கான இருக்கைகள் கொண்டதுமான எயார்பஸ் A330-300 விமானமே பரிஸுக்கு இயக்கப்படவுள்ளது. வாரத்தில் ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரான்ஸுக்கு சேவையை மேற்கொள்ளவுள்ளது.
—————-
Reported by : Sisil.L