நாட்டில் மேலும் 180 பேர் கொரோனாத் தொற்றால் மரணமடைந்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்றுமுன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றுமுன்தினம் உயிரிழந்த 180 பேரில் 97 ஆண்களும், 83 பெண்களும் அடங்குகின்றனர் என்றும் அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதில் 05 ஆண்கள், 02 பெண்கள் 07 பேர் 30 வயதுக்குட்பட்டவர்களாவர். 24 ஆண்கள், 16 பெண்கள் என 40 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 133 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 68 ஆண்களும் 65 பெண்களும் அடங்குகின்றனர்.
—————–
Reported by : Sisil.L