டெல்டா வகைக் கொரோனா கிருமி ஏற்படுத்திய தாக்கத்தால் கனடா இப்போது நான்காம் கட்ட நோய் பரவலால் தடுமாறி வருகிறது.
நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கனடா அந்நாட்டு இளையோரை விரைவாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.
போதுமான அளவு மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால் வரும் நாட்களில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும், அதனால் மருத்துவமனைகளில் அதிக நெருக்கடி ஏற்படக் கூடும் என்றும் கனடா சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக 18 வயதிலிருந்து 39 வயது வரை உள்ளவர்கள், தடுப்பூசித் திட்டத்தில் கலந்து கொள்ள அது அழைத்துள்ளது.
தடுப்பூசி போட முன்வருபவர்களுக்குச் சிறப்புப் பரிசு, ரொக்கம் போன்றவற்றையும் அல்பேர்ட்டா மாநிலம் அறிவித்துள்ளது.
கனடாவிலேயே அல்பேர்ட்டா மாநிலத்தில் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வீதம் மிகக்குறைவாக உள்ளது. அதேவேளை அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
Reported by : Sisil.L