கடந்த 28ஆம் திகதி ஆதிவாசி கிராமமான தம்பானவில் 115 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜென் பரிசோதனைகளில் 44 பேருக்கு கொவிட் தொற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஹியங்கனை மருத்துவ சுகாதார அதிகாரி தெரிவித்தார். இந்தத் துரித அன்டிஜென் சோதனை ஆதிவாசி கிராமங்களிலுள்ள சாதாரண மக்கள் மற்றும் ஆதிவாசிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது. இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த மொத்தம் 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. கொவிட் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டோரில் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலா அத்தோவின் மனைவியும் சகோதரரும் அடங்குகின்றனர். வன்னிலா அத்தோவின் மனைவி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
————————
Reported by : Sisil.L