யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜென் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் 414 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடாநாட்டின் பல பகுதிகளில் நேற்று மேற்கொண்ட அன்டிஜென் பரிசோதனை களின்போது 364 பேர் தொற்றுடன் இனங்காணப் பட்டுள்ளனர். அதே வேளை பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது 50 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகபட்சமாக சாவகச்சேரியில் 124 பேரும் கரவெட்டியில் 102 பேரும் அடங்குகின்றனர். இதேவேளை பருத்தித்துறையில் 56 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.
Reported by : Sisil.L