பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க நைரோபியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பணியாளர்கள் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் தடுப்பு நிதியத்துக்கு வழங்க முன்வந்துள்ளனர்.அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் தடுப்பு நிதியத்துக்கு நன்கொடையாக வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்நன்கொடை வழங்கப்படுகிறது.
இலங்கையில் அதிகரித்து வரும் கொவிட் -19 நிலைமை மற்றும் தொற்றுநோயை எதிர்த்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய தருணத்தில் இலங்கைப் பிரதிநிதிகள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க முடிவு செய்துள்ளனர்.
———-
Reported by : Sisil.L