சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரிஷங்கரி தவராசா காலமானார்

சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரிஷங்கரி தவராசா நேற்று காலமானார். இவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசாவின் துணைவியாரும், மனித உரிமைகள் ஆர்வலருமாவார். திடீர் சுகவீனமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பாலும் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.  தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகள், பயங்கரவாத தடைச் சட்டத் தின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் மற்றும் நாட்டின் முக்கிய அரசியல் வழக்குகளில் திருமதி கௌரி ஷங்கரி தவராசா முன்னிலையாகி நியாயமான தீர்ப்புகளை தனது வாதத் திறமையால் பெற்றுக் கொடுத்தார். அவருக்கு கொவிட்-19 நோய்த் தொற்றுள்ளதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.  
———-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *