ஒரு புதிய அறிக்கையின் படி கனடாவில் சுமார் 95 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். அத்துடன் 43 பேர் இத்தொற்றால் இறந்துள்ளனர்.
கனேடிய சுகாதார தகவல் நிறுவனம் 2021 ஜூன் 15ஆம் திகதி நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் எத்தனை சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த புதிய தரவை நேற்று வியாழக்கிழமை வெளியிட்டது.
கனடாவில் பதிவான 1.4 மில்லியனுக்கும் அதிகமான கொவிட்-19 தொற்றா ளர்களில் 94,873 சுகாதாரப் பணியாளர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 43 சுகாதார பணியாளர்கள் இந்த தொற்றால் உயிரிழந் துள்ளனர்.
கனடாவின் மொத்த வைரஸ் தொடர்புபட்ட இறப்பு எண்ணிக்கை தற்போது 26,761ஆக உள்ளது.
சுகாதாரப் பணியாளர்களிடையே பெரும்பாலான கொரோனா வைரஸ் தொற்றுகள் கியூபெக்கில் 12.3 சதவீதமாகவும் ஒன்ராறியோவில் 4.4வீதமாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒப்பீட்டு ரீதியில் சுகாதார பணியாளர் தொற்றுகள் மொத்த தொற்றாளர்களில் அமெரிக்காவில் 1.5 சதவீதமும் நெதர்லாந்தில் 10.7 சதவீதமும் பிரான்சில் 1.4 சதவீதமும் மற்றும் ஜெர்மனியில் 2.4சதவீதமும் பதிவாகியுள்ளனர்.
————————
Reported by : Sisil.L