கொவிட்-19 தடுப்பூசியை இதுவரை பெறாதவர்களைத் தேடி பொலிஸாரால் வீடு வீடாக பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டம் நேற்று(16) கொழும்பு மாவட்டத்தில் தொடங்கப்பட்டது என ஆரம்ப சுகாதார பராமரிப்பு தொற்றுநோயியல் துறை விஷேட அமைச்சர் மருத்துவர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
கோவிட் -19 தடுப்பூசி இதுவரை பெறாதவர்களைக் கண்டறிந்து அவர்களை தடுப்பூசிக்கு அனுப்பும் நோக்கில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.
அதன்படி பொலிஸாருக்கு மேலதிகமாக சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள், கிராம சேவகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தொடர்புடைய பிற அதிகாரிகள் சுகாதார அறிவுறுத்தலின் படி வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடாதவர்களிடம் விரைவாக தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
இது தவிர தடுப்பூசி போடாதவர்களைத் தேடுவதற்கும் தகவல்களைப் பெறுவதற்கும் அவர்களை விரைவாக தடுப்பூசிக்கு வழிநடத்தும் ஒரு திட்டம் புலனாய்வுப் பிரிவினரால் செயற்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
————————-
Reported by : Sisil.L