கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை மட்டும் 150 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்று கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் மருத்துவர் நிமல் அருமைநாதன் தெரிவித்தார்.பி. சி. ஆர்., அன்டிஜென் பரிசோதனைகளிலேயே இந்தத் தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டது.மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றனர். இதனால் அபாய மாவட்டமாக கிளிநொச்சி
காணப்படுகின்றது. எனவே, மக்கள் பொறுப்புடன் நடந்தால் மட்டுமே தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.இதேவேளை, நேற்று முன்தினமும் கிளிநொச்சியில் 126 தொற்றாளர்கள் பதிவானமை குறிப்பிடத்தக்கது.
———–
Reported by : Sisil.L