கனடாவில் விரைவில் வரவுள்ள டிஜிட்டல் தடுப்பூசி கடவுச்சீட்டு

கனடாவில் வெளிநாடு செல்ல அனுமதிக்கும் டிஜிட்டல் தடுப்பூசி கடவுச்சீட்டை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தடுப்பூசி கடவுச்சீட்டு அமைப்பைக் கொண்டுள்ளது, இது ஒன்றிய நாடுகளுக்குள் மக்கள் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கிறது. அதேபோல், உள்நாட்டு பயன்பாடு மற்றும் சர்வதேச பயணம் ஆகிய இரண்டுக்கும் பல நாடுகள் தடுப்பூசி கடவுச்சீட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளன.


இந்நிலையில், கனேடிய குடிமக்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கும் டிஜிட்டல் தடுப்பூசி கடவுச்சீட்டை உருவாக்க அரசு செயற்பட்டு வருவதாகவும், அது அடுத்த சில மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்றும் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.


இதேவேளை இந்தக் கடவுச்சீட்டு உருவாக்கப்படுவதற்கு முன்பு கனடாவின் 10 மாகாணங்கள் மற்றும் மூன்று வடக்குப் பிரதேசங்களுடன் பொதுவான அணுகுமுறையை ஒப்புக்கொள்ள வேண்டும்.


மேலும் உலகின் சிறந்த தடுப்பூசி பதிவுகளில் கனடாவும் இடம்பெற்றுள்ளது. ஜூலை 31 வரை, 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 81% மக்கள் குறைந்தது முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதுடன் 68 சதவீத மக்களுக்கு முழுமையான தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
—————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *