கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் தரப்பு தெரிவிக்கின்றது. இந்த நிலையில் மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் எனவும், சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேவையற்ற நடமாட்டங்கள், கூடுகைகள், கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக மரணச் சடங்குகளில் மக்கள் கூடுகை அதிகரிக்கின்றமையை உணர முடிவதாகவும், இந்நிலை தொடர்ந்தால் பாரிய ஆபத்தான நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொற்றாபத்திலிருந்து பாதுகாக்க தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும், விற்றமின் அடங்கிய பழங்கள் மற்றும் உடன் மரக்கறி வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
தனி மனித பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்பின் ஊடாகவே மாவட்டத்தின் அபாய நிலையிலிருந்து மீள்வதற்கு சிறந்த வழி எனவும், அதை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
Reported by : Sisil.L