இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் செல்வச்சந்நிதி முருகனுக்கு கொடியேற்றம்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவிலின் வருடாந்தப் பெருந்திருவிழா இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட100 பேர் மட்டும் பங்கேற்றனர். செல்வச்சந்நிதி ஆலயத்துக்குச் செல்வதற்கான  அனைத்து வீதிகளிலும் தடைகள் போடப்பட்டு பொலிஸார், இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதேசமயம், ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்ட அனைவரும், பி.சி.ஆர்., அன்டிஜென் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.
———–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *