சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வாகனப் பேரணி இன்று கொழும்பில் இடம்பெற்றது.
நான்கு வழிகளில் அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்க போராட்டக்காரர்கள் கொழும்பை வந்தடைந்தனர். கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலகம் முன்பாக பலத்த வாகன நெரிசல் ஏற்பட்டது.
நீர்கொழும்பு வீதியின் நவலோக ஸ்டேடியம், கண்டி வீதியின் கடவத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில், ஹைலெவல் வீதி பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயம், காலி வீதியின் மொரட்டுவ நகர் ஆகிய இடங்களில் வாகனப் பேரணிகள் ஆரம்பமாகி கொழும்பை வந்தடைந்தன.
இதேவேளை மொரட்டுவவில் ஆரம்பிக்கப்பட்ட அதிபர், ஆசிரியர் ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் இன்று(4) மொரட்டுவ மேலதிக நீதிவானிடம் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் மொரட்டுவ மேலதிக நீதிவான் உத்தால சுவஹந்துருகொட, தடை உத்தரவை நிராகரித்தார். நாடு முழுவதும் திறந்திருக்கும் நேரத்தில் கொவிட் அதிகாரத்தில் தடை செய்ய முடியாது என்றும் அமைதியற்ற முறையில் போராட்டம் நடத்தப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L