பொது மக்கள் சுகாதார வழிகாட்டிகளின் படி சரியான முறையில் செயற்படாவிட்டால் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும், நாடு கடந்த மே மாதம் காணப்பட்ட நிலைமையை நோக்கிப் பயணிக்கலாம் என்றும் சுகாதாரப் பிரிவின் வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
டெல்டா கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது என நம்புவதாக வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒட்சிசன் தேவையுள்ளவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பாக மேல் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் குறித்த நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவது ஆபத்தானது என வைத்தியர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பொது மக்கள் சுகாதார வழிகாட்டிகளை சரியானமுறையில் செயற்படாவிட்டால் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும், நாடு கடந்த மே மாதம் இருந்த நிலையை நோக்கிப் பயணிக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L