யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கடந்த ஒரு வார காலப் பகுதிக்குள் 15 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அனைவருக்கும் கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
——————-
Reported by : Sisil.L