வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கு சான்றிதழ் வடிவில் தடுப்பூசி சான்று தேவைப்படும் எவரும், அருகிலுள்ள சுகாதார அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு கல்வி நோக்கங்களுக்காக தடுப்பூசி சான்று தேவைப்படும் எவரும் அருகிலுள்ள மருத்துவ அதிகாரிகள் சங்க அலுவலகத்தில் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தனிநபர் ஒருவர் தடுப்பூசி அட்டையைப் பெற்றுக்கொள்ள தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் பயணத்திற்கான ஆதாரம் போன்றவற்றை சமர்ப்பித்து இதனைப் பெற்றுக்கொள்ள முடியும். அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டவுடன் கணினி மூலம் உருவாக்கப்பட்ட சான்றிதழ் அதிகாரியால் வழங்கப்படும். மேலும் இதனை தடுப்பூசியின் அதிகாரப்பூர்வ ஆதாரமாக பயன்படுத்தப்படலாம் என அவர் தெரிவித்தார்.
————-
Reported by : Sisil.L