இலங்கையில் இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியால் 127.8 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டை விட 16.5 வீத அதிகரிப்பாகும்.
இந்த வருமானத்தை ஈட்டுவதற்காக, ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் நாடு 136 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ள அதேவேளை 2020 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 124 கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏற்றுமதிகளில் தேயிலை பக்கெட்டுகள், தேயிலைப் பொதிகள், உடனடித் தேயிலை மற்றும் பச்சை தேயிலை(Green tea) என்பனவும் அடங்குகின்றன.
————————
Reported by : Sisil.L