எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் ; மீண்டும் பிரேதப் பரிசோதனை வேண்டும் : இஷாலினியின் தாய்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் வேலை செய்த நிலையில் உயிரிழந்த தனது மகள் இஷாலினிக்கு நீதி வேண்டும் எனக் கோரி அவரது பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தனது மகள் ஒருபோதும் தீ வைத்து தற்கொலை செய்திருக்க மாட்டாள் என தான் நம்புவதாக டயகம சிறுமியின் தாயான ராஜமாணிக்கம் ரஞ்சனி தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் தனது மகளுக்கு பல துன்பங்கள் நேர்ந்ததாக அவர் கூறியுள்ளார்.


அத்துடன் பிரேதப் பரிசோதனை செய்தது இஸ்லாமியர் ஒருவர் என்பதால் அதில் தனக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதனால் சடலத்தின் மீது மீண்டும் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தாய் கேட்டுக் கொண்டுள்ளார்.


மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
——————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *