நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் கணிசமான அளவில் இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விஷேட மருத்துவ நிபுணர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.இன்று(26) காலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை நேற்று தெரிவிக்கப்பட்ட தினசரி கொவிட் தொற்றாளர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் டெல்டா தொற்றாளர்களாக இருக்கலாம் என்று மருத்துவர் ஹேமந்த ஹேரத் கூறினார்.
இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் அதிகமாக அல்லது குறைவாக இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு இப்போது வந்துள்ளோம். டெல்டா பாதிப்புற்ற 68 நோயாளிகள் பல மாதிரிகளிலிருந்து அடையாளம் காணப்பட்டனர். ஆனால் இந்த 68 பேரை விட அதிக எண்ணிக்கையானோர் சுற்றுச்சூழலில் உள்ளனர் என்பது உண்மைதான். நேற்று 1666 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றார்.
டெல்டா கொவிட் கொத்தணிகள் உருவாகாது தடுக்க சுகாதார அதிகாரிகள் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
————
Reported by : Sisil.L