யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 பேர் உட்பட வடக்கில் 31 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 369 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் 23 பேர்
அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் 05 பேர்,உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், வேலணை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 02 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,
பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்
கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பேர்
பளை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
மன்னார் மாவட்டத்தில் 02 பேர்
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், இவர்களுடன் பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 03 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
—————-
Reported by : Sisil.L