யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில் இராணுவமயமாக்கல், கல்வியை தனியார் மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் காலை 10.00 மணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஆசிரிய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
—————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *