அத்தியாவசிய சேவையினருக்காக நாளை முதல் பஸ், ரயில் சேவைகள்

நாளை புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைக் கடமைகளில் ஈடுபடுவோருக்காக மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் நடத்தப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


பேருந்துகள் மற்றும் தொடருந்துகளின் சேவைகளைப் பெற விரும்பும் அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்கள் தங்கள் கடமை அடையாள அட்டை அல்லது கடமை உறுதிப்படுத்தல் கடிதத்தை வைத்திருப்பது
கட்டாயமாகும்.


அதே நேரத்தில், அத்தியாவசிய தனிப்பட்ட விடயங்களுக்காக பல்வேறு நிறுவனங்களுக்குச் செல்ல விரும்புவோர் இந்த மாகாணங்
களுக்கு இடையேயான பேருந்துகள் மற்றும் ரயில்களைப் பயன்படுத்துவதன் மூலமும் தங்கள் தேவைகளை நிறைவு செய்ய
முடியும். அவர்களும் தங்கள் தேவையை உறுதிப்படுத்தும் ஆவணத்தை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும்.
நேற்று கண்டியில் நடைபெற்ற தடுப்பூசி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திலும் அமுனுகம இதனைத் தெரிவித்தார்.
——————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *