பொத்துவில் கடலில் காணாமல் போன மீனவர்கள் திருமலை கடற்பகுதியில் உயிருடன் மீட்பு

பொத்துவில் கடலில் காணாமல் போன இரு மீனவர்கள் 14 நாட்கள் கடந்த பின் திருகோணமலை கடல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டு  நேற்றிரவு பொத்துவிலைச் சென்றடைந்தனர்.

காணாமல் போன குறித்த மீனவர்கள்  திருகோணமலை கடற்பகுதியிலிருந்து சுமார் 85 கிலோ மீற்றர் தொலைவில் திருகோணமலையைச் சேர்ந்த ஆழ்கடல் மீன் பிடிப்படகு ஒன்றின் உரிமையாளர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கரை திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  
———-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *