கொவிட்-19: புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது

கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறித்து புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவால் வெளியிடப்பட்டுள்ளார்.அதன்படி, சமய வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என குறித்த சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக 150 பேர் பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருமண வைபவங்களையும் நடத்த அனுமதி வழங்கப்படும் மண்டபத்தில் இருக்கையைப் பொறுத்து நூற்றுக்கு 25 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வாராந்திர சந்தை, பொருளாதார மத்திய நிலையம், செயலமர்வு , மாநாடுகள், கருத்தரங்குகள், விளம்பரப்படுத்தல் நடவடிக்களை மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. புடவை விநியோகம், நூலகங்கள், வியாபார மத்திய நிலையங்கள், நடைபாதைகள், சினிமாக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியன புதிய சுகாதார வழிகாட்டி மூலம் செயற்பட அனுமதி வழங்கப் பட்டுள்ளது. கொரோனா தொற்று இன்றி உயிரிழந்தவர்களின் சடலங்களை 24 மணி நேரத்தில் இறுதி கிரிகைகள் செய்ய வேண்டும்.அச்சடங்கில் 50 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீச்சல் குளங்கள் – ஸ்பாக்கள் – ஹோட்டல்கள் மற்றும் ஓய்வறைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் கெசினோக்கள் – இரவு விடுதிகள் மற்றும் பந்தய நிலையங்கள் ஆகியவற்றை தொடர்ந்து மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
————————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *