டெல்டா கொவிட் வகை அடையாளம் காணப்பட்ட கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஓர் ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 14 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்பதோடு அவர்களது குடும்பங்கள், உறவினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இத்தொழிற்சாலையின் சில ஊழியர்களுக்கு மட்டுமே கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளதுடன் அனைத்து ஊழியர்களும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
————————–
Reported by : Sisil.L