அல்லைப்பிட்டியில் பிறந்த நாள் கொண்டாடியோர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்

அல்லைப்பிட்டியில் உள்ள விடுதியில்  பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் கட்டாய சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அத்துடன், விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற 19 பேர்நண்பர் ஒருவரின்  பிறந்தநாள் கொண்டாடுவதற்கு முற்பட்டுள்ளனர்.

அதையறிந்த அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், ஊர்காவற்றுறை பொலிஸாருடன் சென்று தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக 19 பேரையும் அந்த விடுதியிலேயே சுயதனிமைப்படுத்தினர்.
அத்துடன், நட்சத்திர விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.


சுயதனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும்  பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
—————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *