நல்லூர் வாசி கொரோனாவுக்குப் பலி

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99ஆக உயர்வடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச்சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் சுகாதார விதிகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட அன்டிஜென் பரிசோதனைகளில் 28 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் நேற்று மாலை வரை 5 ஆயிரத்து
390 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
——————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *