சுகாதார வழிகாட்டுதல்களை இறுக்கமாகப் பின்பற்றாவிட்டால் அடுத்த பத்து வாரங்களில் டெல்டா வைரஸ் இலங்கை முழுவதும் பரவும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அல்பா, டெல்டா வைரசினால் அதிகளவு பாதிக்கப்படுவார்கள் எனவும் இதன்காரணமாகவே முதியவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் டெல்டா வைரஸ் பரவும் ஆபத்து குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் எனவும் இதுவரை 12 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L