பாணந்துறையில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட எட்டு பெண்கள் உட்பட 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.பாணந்துறை பலேமுல்லவில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களே அதே இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்தவுடன் தனிமைப்படுத்தல் சட்டங்களின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சுகாதார வழிகாட்டுதல்களை மீறி திருமணம் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவர்கள் அந்த இடத்தை சோதனையிட்டனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் அங்கு சென்றவேளை ஏற்கனவே பலர் அங்கிருந்து சென்றுவிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
——————
Reported by : Sisil.L